திருப்பரையார்: கேரள மாநிலம், திருப்பரையாறு ராமசுவாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேரளாவில் கோட்டக்கல்லில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவர் திருப்பரையாறு ராமசுவாமி கோவிலுக்கு சென்றார். அவருடன் அவரது மகள் உமாதேவியும் உடன் சென்றார்.கோவில் வளாகத்தில் தற்போதுள்ள விளக்கு மாடங்களை பித்தளையால் வேய்வது குறித்து, ஸ்ரீராம் கல்சுரல் டிரஸ்ட் நிர்வாகிகள், முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, கோவிலுக்கு கர்நாடக முதல்வர் 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார். தொடர்ந்து சூலூர் யோகினி மாதா பாலிகா சதனத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார்.முன்னதாக அவர் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் துலாபார நேர்த்தி கடன் நிறைவேற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment